News March 27, 2024
வேலூர்: கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவர்கள் கைது

வேலூர் மாவட்டம் பிள்ளையார்குப்பம் அருகே கஞ்சா விற்பனை நடப்பதாக சத்துவாச்சாரி போலீசாருக்கு நேற்றிரவு (மார்ச் 26) ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து சென்ற போலீசார் அங்கு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு கொண்டிருந்த தினேஷ் (34), ஜெயபிரகாஷ் (24), அஜித் (22) ஆகிய மூன்று பேரை கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சா மற்றும் கார் பறிமுதல் செய்யப்பட்டது.
Similar News
News April 4, 2025
குடியாத்தத்தில் ஏப்.11ஆம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் வரும் ஏப்.11ஆம் தேதி அன்று காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. சிவில், மின்னணு, தகவல் தொழில்நுட்பம், வெல்டர், ஃபிட்டர், பிளம்பர் உள்ளிட்ட துறைகளில் ஆட்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். வேலைவாய்ப்பற்றவர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
News April 4, 2025
1,299 SI பணியிடங்கள்: 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ. பணியிடங்களுக்கான தேர்வுக்கு வரும் 7ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாலுகாவில் 933 காலிப் பணியிடங்களும். ஆயுதப்படையில் 366 காலிப் பணியிடங்களும் உள்ளன. ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் பெற்றவர்கள் வரும் மே 3ஆம் தேதி வரை இந்த <
News April 4, 2025
பைக் மோதி கூலித்தொழிலாளி பலி

வேலூர், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (52). கூலித் தொழிலாளியான இவர், நேற்று முன்தினம் (ஏப்.2) சேண்பாக்கம் அருகே உள்ள சர்வீஸ் சாலையை கடக்கும்போது பைக் ஒன்று அவர் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.