News December 21, 2025
வேலூர்: கஞ்சா வழக்கில் கைதானவர் உயிரிழப்பு!

குடியாத்தம் தாலுகா போலீசார் கடந்த மாதம் 26-ந் தேதி கொட்டமிட்டா கிராமத்தை சேர்ந்த கண்ணையன் (65) என்பவரை கஞ்சா செடி வளர்த்ததற்காக கைது செய்தனர். பின்னர் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். அங்கு கண்ணையனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின், சொந்த ஊரான கொட்டமிட்டா கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது.
Similar News
News December 23, 2025
வேலூர் மக்களே – 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) இங்கு<
News December 23, 2025
வேலூர்: 575 அரசு வேலை.. தேர்வே கிடையாது!

மத்திய அரசின் என்எல்சி இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள 575 அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு சம்பளமாக ரூ.12,524 முதல் 15,028 வரை பணிக்கேற்ப வழங்கப்படுகிறது. பிஇ, பிடெக், டிப்ளமோ கல்வித்தகுதி உள்ளவர்கள் இங்கே<
News December 23, 2025
வேலூர்: ஆடு, மாடு வளர்க்க ரூ.50 லட்சம் வரை மானியம்!

ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பில் விவசாயிகள் மற்றும் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், மத்திய அரசு உத்யமி மித்ரா திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதன் மூலம், கால்நடை பண்ணைகள் அமைப்பதற்கு ரூ.20 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் இங்கு <


