News November 19, 2025

வேலூர்: கஞ்சா கடத்திய சிறை கைதிகள்

image

திருவண்ணாமலையை சேர்ந்த மணிகண்டன் (28), மதன்குமார் (26) 2 பேரும் வேலூர் மத்திய சிறையில் விசாரணை கைதிகளாக அடைக்கப்பட்டுள்ளனர். 2 பேரையும் விசாரணைக்காக திருவண்ணாமலை கோர்ட்டுக்கு நேற்று முன்தினம் அழைத்து சென்றனர். மீண்டும் சிறைக்கு வந்த போது சிறை நுழைவு வாயிலில் இருவரையும் சிறைகாவலர்கள் சோதனை செய்தனர். கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து புகாரின் பேரில் பாகாயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Similar News

News November 21, 2025

வேலூர்: வாக்காளர் கணக்கீடு படிவங்கள் 96% விநியோகம்!

image

வேலூர் மாவட்டம் முழுவதும் வாக்காளர் பட்டியல் (SIR) கணக்கீடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் வீடு வீடாக சென்று (SIR) படிவங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், 96 சதவீத மக்கள் வரை சென்றுவிட்டதாக தேர்தல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மீதமுள்ள பகுதிகளில் விரைவில் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர். மேலும், பொதுமக்கள் படிவங்களை கவணத்துடன் எழுதவேண்டும் என அறிவுருத்தினர்.

News November 21, 2025

வேலூர்: மாவட்ட ஆட்சியர் புதிய அறிவிப்பு!

image

வேலூர், வாக்காளர் திருத்த கணக்கெடுப்பு படிவங்களை பூர்த்தி செய்வதற்காக வருகிற (நவ.22 மற்றும் 23) ஆகிய இரண்டு நாட்களில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம்களை வாக்காளர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி தெரிவித்துள்ளார். இந்த முகாம்கள் வாக்காளர் பட்டியலில் உள்ள பிழைகளை திருத்த செயல்படுகிறது.

News November 21, 2025

வேலூர்: ரயில்வேயில் 5,810 காலியிடங்கள் – APPLY NOW!

image

இந்திய ரயில்வேயில் காலியாக உள்ள 5,810 காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, டிக்கெட் மேற்பார்வையாளர்-161, ஸ்டேஷன் மாஸ்டர்-615, சரக்கு ரயில் மேலாளர்-3416, இளநிலை கணக்கு உதவியாளர்-921, முதுநிலை எழுத்தர்-638 போக்குவரத்து உதவியாளர்-59. டிகிரி முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.25,500-ரூ.35,400 வரை வழங்கப்படும். நவ.27ம் தேதிக்குள் இங்கு<> கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!