News September 14, 2025

வேலூர்: ஒரே நாளில் குவிந்த மனுக்கள்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (செப்டம்பர் 13) பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டு குறை தீர்க்கும் சிறப்பு முகாம் அனைத்து தாலுகாக்களிலும் நடைபெற்றது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் தொடர்பான 153 மனுக்கள் பெறப்பட்டு, உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு தீர்வு காணப்பட்டன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Similar News

News September 14, 2025

வேலூர்: குழந்தை வரம் தரும் அற்புத தலம்!

image

வேலூர் மாவட்டம் பாலற்றாங்கரையில் விரிஞ்சிபுரம் மார்க்கபந்தீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. சுவாமி இங்கு சுயம்பு மூர்த்தியாக, சாய்ந்த மகா லிங்கமாக எழுந்தருளியுள்ளார். மேலும் இக்கோயில் குழந்தை வரம் மற்றும் திருமண தடை நீக்கும் பிரசித்தி பெற்ற திருத்தலமாகும். மேலும் தொல்லை தீர்ந்து செல்வம் பெரும் என்பது ஐதீகமாக இருக்கிறது. இந்த செய்தியை மறக்காம உங்களுக்கு தெரிஞ்சவங்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

வேலூர்: BE/ B.Tech, B.Sc/M.Sc,CA படித்திருந்தால் 1,56,500 வரை சம்பளம்!

image

மகாராஷ்டிரா வங்கியில் வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி டேட்டா அனலிஸ்ட், ஜாவா டெவலப்பர், டேட்டா இன்ஜினியர் போன்ற பல பணிகளுக்கு BE/ B.Tech, B.Sc/M.Sc, CA டிகிரி முடித்த 22-35 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாதம் 85,000-1,56,500 வரை சம்பளம் வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் இந்த லிங்கை<> க்ளிக்<<>> செய்து செப்-30குள் விண்ணப்பிக்கலாம். உங்கள் நண்பர்களுக்கு ஷேர் பண்ணுங்க.

News September 14, 2025

வேலூர்: 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை

image

காட்பாடி பகுதியை சேர்ந்த சத்யா இவரது மகள் தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து காட்பாடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!