News March 30, 2024

வேலூர் : ஏரியில் மூழ்கி 4 பெண்கள் பலி

image

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வேப்பூர் ஏரியில் குளித்து கொண்டிருந்த 4 பெண்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். குடியாத்தம் தங்கம் நகரை சேர்ந்த  சரோஜா, அவரது மகள் லலிதா, சகோதரிகள் காஜியா , ப்ரீத்தி ஆகிய 4 பேர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து குடியாத்தம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Similar News

News February 9, 2026

வேலூரில் பறவை காய்ச்சல் பரவலா?

image

வேலூர் மாவட்டத்தில் பறவை காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 வட்டாரங்களில் தலா 3 குழுக்கள் வீதம் 21 தீவிர கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இதுவரை பாதிப்பு இல்லை எனவும் பொதுமக்கள் இறந்த பறவைகளை தொட வேண்டாம் எனவும் மாவட்ட ஆட்சியர் அறிவித்து உள்ளார். மேலும் பறவைகளுக்கு அறிகுறிகள் இருந்தால் உடனே அரசு மருத்துவமனை அணுக வேண்டும் என வலியுறுத்தப்பட்டு உள்ளது.

News February 9, 2026

வேலூரில் EB பில் எகுறுதா..?

image

வேலூர் மக்களே உங்க கரண்ட் பில் அதிகமா வருதா..?<> இங்கு கிளிக்<<>> செய்து TNEB ‘பில் கால்குலேட்டரில் ’Domestic’ என்பதை தேர்ந்தெடுத்தால், இரண்டு மாதத்தில் ஓடிய மொத்த யூனிட்டை பதிவு செய்து 100 யூனிட் இலவச சலுகையுடன், நீங்கள் கட்ட வேண்டிய சரியான தொகையை காண்பிக்கும். ஒரு வேளை உங்கள் பில் அதிகமாக வந்தால் 94987 94987 என்ற எண்ணில் புகார் தெரிவிக்கலாம். (SHARE)

News February 9, 2026

வேலூர்: கடைக்கு சென்றவருக்கு அடி உதை!

image

சித்தூர்கேடை சேர்ந்த அக்பர் பாஷா கடைக்கு சென்றுள்ளார். அப்போது அங்கு வந்த இஸ்மாயில் கடைக்காரரிடம் தகராறில் ஈடுபட்டார். யதார்த்தமாக அக்பர் வீட்டுக்கு போன் செய்வதை, சண்டைக்கு ஆள் சேர்கிறார் என தவறாக நினைத்த இஸ்மாயில், அக்பரை பீர் பாட்டிலால் அடித்து உள்ளார்.இதில் காயமடைந்த அக்பர்பாஷா குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதில் இஸ்மாயில், ஆஜாம் உள்ளிட்ட 5 பேரை கைது செய்தனர்.

error: Content is protected !!