News November 8, 2025

வேலூர் எஸ்பி தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணி

image

தமிழ்நாடு சீருடைப்பணியாளர் தேர்வு வாரியத்தால் 2025-ம் ஆண்டுக்கான 2-ம் நிலை காவலர், சிறைக்காவலர், தீயணைப்பு வீரர்களுக்கான எழுத்து தேர்வு நாளை நவம்பர் 9-ம் தேதி நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை மொத்தம் 9,561 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில், எஸ்பி மயில்வாகனன் தலைமையில் 1200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர், என காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 8, 2025

தேர்வு மையம் முன்னேற்பாடு பணிகளை எஸ்பி ஆய்வு

image

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் சார்பில் 2ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு வேலூர் மாவட்டத்தில் நாளை (நவ. 9) நடைபெற உள்ளது. வேலூர் மாவட்டத்தில் 3 மையங்களில் நடைபெறும் இந்த தேர்வை 9561 பேர் எழுத உள்ளனர். தேர்வு நடைபெறும் மையமான தொரப்பாடி தந்தை பெரியார் பொறியியல் கல்லூரியில் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் இன்று ( நவ. 8) மாலை ஆய்வு செய்தார்.

News November 8, 2025

வேலூர் பெண்களே நிலம் வாங்கினால் ரூ.5 லட்சம் மானியம்!

image

பெண்களை நில உடைமையாளர்களாக மாற்றும் வகையில் தாட்கோ மூலமாக ‘நன்னிலம் மகளிர் நில உடைமைத் திட்டம்’ கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் மூலம் பெண்கள் விவசாய நிலம் வாங்குவதற்கு ரூ.5 லட்சம் வரை மானியம் பெறலாம். அதேபோல், முத்திரைத்தாள், பதிவு கட்டணத்தில் இருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்படும். இதில் பயனடைய விரும்பும் பெண்கள் <>இங்கு க்ளிக்<<>> செய்து மேலும் விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

News November 8, 2025

வேலூர்: இனி உங்களுக்கு அலைச்சல் இல்லை!

image

10, +2 மதிப்பெண் சான்றிதழ், ஏதேனும், அரசு ஆவணங்கள் தொலைந்துவிட்டால், அரசு அலுவலகங்களுக்கு ஏறி இறங்க வேண்டியதில்லை. இனி ஈசியாக ஆன்லைனில் பெற்றுக் கொள்ளலாம். அரசின் <>epettagam.tn.gov.in <<>>என்ற இணையதள பக்கத்திற்கு சென்று, உங்களின் ஆதார் எண்ணைக் கொடுத்து உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் OTP-யை கொடுத்து உங்களின் ஆவணங்களை அனைத்தும் உடனே பதிவு செய்து கொள்ளலாம் . SHARE செய்யவும்.

error: Content is protected !!