News July 6, 2025

வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் உருக்கமாக இரங்கல்

image

கே.எச்.குழுமத் தலைவரும், தென்னிந்திய தோல் பதனிடுவோர் மற்றும் முகவர்கள் பேரவையின் ஆதரவாளர் ஜனாப் ஹாஜி மலாக் முகமது ஹாஷிம் சாஹிப் காலமானார். அவரது மறைவு செய்தியறிந்த வேலூர் எம்.பி. கதிர் ஆனந்த் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். “சொல்லொணா துயருற்றேன். அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன்” என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

Similar News

News July 6, 2025

வேலூரில் 6 மாதத்தில் ரூ.8 கோடி பணம் மோசடி

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 1,335 புகார்கள் வந்துள்ளது. மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை முடக்கம் செய்து, 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கு வரவு வைப்பதற்கான பணி நடந்து வருகிறது. சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்துள்ளோம். என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

News July 6, 2025

கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

image

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

image

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும். ரூ.11,100 – ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். வரும் செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு வேலூர் ஆட்சியர் அலுவலகத்தை (0416-2252345, 0416-2220042) தொடர்பு கொள்ளுங்கள். ஷேர் பண்ணுங்க. <<16961996>>தொடர்ச்சி<<>>

error: Content is protected !!