News March 1, 2026

வேலூர்: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும். பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த பயனுள்ளத் தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

Similar News

News March 1, 2026

வேலூரில் குடிநீரே வழங்காமல் வரி வசூல்?

image

பள்ளிகொண்டா பேரூராட்சி அலுவலகத்தில் நேற்று மாதாந்திர மன்ற கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய கவுன்சிலர்கள், ”ரூ.30 கோடியில் 3 ஆண்டாக நடந்து வந்த அம்ருத் திட்டப் பணிகள் முடிந்து 3 ஆண்டுகள் ஆகியும், இன்னும் குடிநீர் வினியோகம் செய்யவில்லை. 1,13,14 ஆகிய வார்டுகளில் குடிநீர் வழங்காமலேயே காவிரி கூட்டு குடிநீர் திட்டத்திற்கு வரி வசூல் செய்து வருகிறார்கள்” என புகார் தெரிவித்துள்ளனர்.

News March 1, 2026

வேலூரில் சிறுவன் பரிதாப பலி!

image

பேரணாம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் கோபால். இவரது மகன் அதிரூபன் (8). இந்நிலையில், சிறுவன் அதிரூபன் அதேபகுதியில் உள்ள விஜயகுமார் என்பவரது பேக்கரி அருகே நேற்று விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அப்போது எதிர்பாராவிதமாக திடீரென சுவர் சரிந்து அதிரூபன் மீது விழுந்தது. அங்கிருந்தவர்கள் சிறுவனை மீட்ட போது, சிறுவன் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து, உமராபாத் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News March 1, 2026

வேலூரில் கலெக்டர் அதிரடி உத்தரவு!

image

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு வேலூர் மாவட்டத்தில் 25 தாசில்தார்களை இடமாற்றம் செய்து கலெக்டர் சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அதன்படி வேலூர் தேர்தல் பிரிவு தாசில்தார் சத்திய மூர்த்தி வேலூர் தாலுகா கோட்ட கலால் அலுவலராகவும், காட்பாடி தாசில்தார் ஜெகதீஸ்வரன் துணை ஆய்வுக்குழு அலுவலராகவும், பேரணாம்பட்டு சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேவி குடியாத்தத்துக்கும் இதேபோல் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!