News November 24, 2025
வேலூர்: உங்கள் வீட்டில் பெண் குழந்தை உள்ளதா?

முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் மூலம் ஒவ்வொரு பெண் குழந்தைக்கும் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000 வழங்கப்படுகிறது. 2 அல்லது 3 பெண்குழந்தை இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம் அல்லது மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகியோ விண்ணப்பிக்கலாம். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!
Similar News
News November 25, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியரின் இன்றைய அறிவிப்பு!

வேலூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில் பிறப்பு முதல் 18 வயதுள்ள மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கு மருத்துவ மதிப்பீட்டு முகாம் வரும் நவம்பர் 28-ம் தேதி வேலூர் அண்ணா சாலையில் உள்ள அரசினர் முஸ்லிம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (நவ 24) தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News November 24, 2025
வேலூர்: கால்வாயில் மிதந்து வந்த பெண் சிசு!

வேலூர் பென்ட்லேண்ட் அரசு மருத்துவமனை வெளியே உள்ள கால்வாயில் பெண் சிசு ஒன்று இறந்த நிலையில் மிதந்து கொண்டு இருந்தது. இதை இன்று பார்த்த அந்த பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த போலீசார் பெண் சிசுவை கால்வாயில் இருந்து மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து குழந்தையை வீசி சென்ற நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.
News November 24, 2025
வேலூர்: அரசு தேர்வர்களே.. இதை கவனியுங்க!

அரசுத் தேர்வுகளுக்கு வீட்டில் இருந்தே தயாராகும் மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு பயனுள்ள சில இணையதளங்கள் உள்ளன. அவற்றின் மூலம், Mock Tests, Reasoning Materials மற்றும் Notes-களை முற்றிலும் இலவசமாகவே பயன்படுத்திக்கொள்ள முடியும். <


