News August 16, 2025
வேலூர் இளைஞர்களுக்கு கான்ஸ்டபிள் வேலை

மத்திய பாதுகாப்பு துறையின் கீழ் எல்லை பாதுகாப்பு படையில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்தாண்டு மொத்தம் 3,588 கான்ஸ்டபிள் பணியிடங்கள் நிரப்பப்படுகிறது. 69,100 வரை சம்பளம் வழங்கப்படும். 10ஆம் வகுப்பு மற்றும் ஐடிஐ படித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். 23ஆம் தேதிக்குள் ஆண், பெண் இருபாலரும் இந்த <
Similar News
News August 16, 2025
வேலூர்: உலகின் மிகப்பெரிய வைடூரியம்

வேலூர் ஸ்ரீபுரம் தங்கக்கோயிலில் உள்ள ஸ்ரீசக்தி கணபதிக்கு கடந்த 2023ம் ஆண்டு ஒரே கல்லால் ஆனா வைடூரியம் பதிக்கப்பட்ட தங்க கிரீடம் அணிவிக்கப்பட்டது. இந்த கிரீடத்தில் உள்ள வைடூரியம் 880 கேரட் கொண்டது. இந்த வைடூரியம் தான் உலகிலேயே மிகப்பெரிய வைடூரிய கல்லாக கருதப்படுகிறது. இதன் மதிப்பு ரூ.5 கோடி. ஷேர் பண்ணுங்க.
News August 16, 2025
வேலூரில் இல. கணேசன் மறைவுக்கு அஞ்சலி

வேலூர் மாவட்ட பாஜக சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவையொட்டி பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அதிகாரி ஜெகதீசன், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், வேலூர் பாஜக மாவட்ட செயலாளர் தசரதன், உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
News August 16, 2025
திருத்தணியில் அணைக்கட்டு எம்.ஏல்.ஏ சாமி தரிசனம்

திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் மற்றும் வேலூர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்றத் உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் இன்று சாமி தரிசனம் செய்தனர். உடன் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள், ஆலய நிர்வாகத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்