News December 27, 2025
வேலூர் இல்லத்தரசிகளுக்கு அரிய வாய்ப்பு! DONT MISS

வேலூர் மாவட்ட மக்களே.., ஏழைப் பெண்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த ‘LIC’ மூலம் ‘எல்.ஐ.சி பீமா சகி யோஜனா’ எனும் மத்திய அரசு திட்டம் உள்ளது. இதன் மூலம் பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் பயிற்சி, மாதம் ரூ.7,000 முதல் உதவித் தொகை வழங்கப்படும். மேலும், பாலிசி விற்பனையில் கமிஷன்களும் வழங்கப்படும். பயிற்சி முடிந்ததும் அவர்கள் எல்.ஐ.சி முகவராகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News December 29, 2025
வேலூர்:மது பாக்கெட் பதுக்கிய நபர் கைது!

பேரணாம்பட்டு மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் பேரணாம்பட்டு போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்த சவுந்தரபாண்டியன் (35) வீட்டில் போலீசார் சோதனையிட்டபோது 90 மில்லி கொண்ட கர்நாடகா மாநில 20 பிராந்தி பாக்கெட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து மது பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து, சவுந்தரபாண்டியனை கைது செய்தனர்.
News December 29, 2025
வேலூர்: நகை திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது!

காட்பாடி பிரம்மபுரம் பகுதியை சேர்ந்தவர் தேவா கடந்த 27-ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் வைத்திருந்த 6 கிராம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் பிரம்மபுரம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் நகை திருட்டில் ஈடுபட்ட திலீப்குமார் (25), சதீஷ் (28) ஆகிய இருவரையும் போலீசார் நேற்று(டிச.28) கைது செய்து, 6 கிராம் நகையை பறிமுதல் செய்தனர்.
News December 29, 2025
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் மற்றும் முக்கிய இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்பாக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றனர். அதன்படி இன்று (டிசம்பர் 28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.


