News December 24, 2025

வேலூர்: இலவச தையல் இயந்திரம் APPLY HERE!

image

வேலூர் மாவட்ட மக்களே, இலவச தையல் இயந்திரம் பெற அலையாமால் விண்ணப்பிக்க வழி உண்டு. 1.) இங்கு<> கிளிக் <<>>செய்து பயனாளர் உள்நுழைவில் புதிய ID உருவாக்கவும். 2). Social Welfare என்பதை தேர்ந்தெடுக்கவும். 3.) “Sathiyavani Muthu Ammaiyar” திட்டத்தை தேர்வு செய்து, வருமான சான்று உள்ளிட்டவைகளை பதிவு செய்து விண்ணப்பியுங்க. ( வீட்டிலிருந்தே விண்ணப்ப நிலையை பார்க்கலாம்) மற்றவர்களும் பயனடைய SHARE செய்யுங்க!

Similar News

News December 25, 2025

வேலூர்: வீடு புகுந்து நகை, கிறிஸ்துமஸ் துணிகள் திருட்டு!

image

குடியாத்தம் பகுதியைச் சேர்ந்தவர் டி.மோகன். பேரணாம்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று இவரது வீட்டில் பீரோவில் இருந்த இரண்டரை பவுன் நகை, வெள்ளி கொலுசு மற்றும் பட்டுப்புடவைகள், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு வாங்கிய புது துணிகள் ஆகியவை திருட்டு போயிருப்பதை கண்டு திடுக்கட்டார். இந்த திருட்டு சம்பவம் குறித்து குடியாத்தம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News December 25, 2025

வேலூர்: மது பதுக்கி விற்ற பெண் கைது!

image

வேலூர் தெற்கு காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது‌. அதன்பேரில் போலீசார் வேலூர் சலவன்பேட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது எம்ஜிஆர் நகர் பகுதியை சேர்ந்த கோதாவரி என்கிற பூங்கோதை (47) என்பவர் வீட்டில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

News December 25, 2025

வேலூர்: தொழிலாளி மர்ம மரணம்!

image

வேலூர் வசந்தபுரம் இந்திராநகர் பகுதியைச் சேர்ந்தவர் அருண்குமார் (35). தொழிலாளியான இவர் நேற்று நீண்ட நேரம் ஆகியும் எழுந்திருக்கவில்லை. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் அவரை தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், அருண்குமார் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!