News December 19, 2025
வேலூர்: இரவு ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இன்று (டிச-18) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
Similar News
News December 20, 2025
வேலூரில் பைக்குகள் தொடர் திருட்டு!

வேலூர் கொணவட்டம் அப்துல்ஷாகிப் தெருவை சேர்ந்தவர் அன்சார் (35). இவர், வீட்டு வாசலில் தனது பைக்கை நிறுத்தி இருந்தார். நேற்று வந்து பார்த்த போது பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மற்றொரு பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.
News December 20, 2025
காட்பாடி: நடந்து சென்ற மூதாட்டியிடம் 2 பவுன் திருட்டு!

காட்பாடி பிரம்மபுரம் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் இந்திரா (58). இவர் நேற்று முன்தினம் வள்ளிமலை செல்லும் சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை பின்தொடர்ந்து பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இந்திரா அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை கழுத்தில் இருந்து பறித்து சென்றனர். இதுகுறித்து இந்திரா காட்பாடி போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News December 20, 2025
வேலூர்: தேங்காய் வியாபாரி மயங்கி விழுந்து பலி!

ஒடுகத்தூரை சேர்ந்தவர் மாய கிருஷ்ணன் (50). இவர் தோப்புகளை குத்தகை எடுத்து தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். பள்ளிகொண்டா சின்னகருங்காலியில் உள்ள தென்னந்தோப்பில் நேற்று திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே அங்கிருந்தவர்கள் மாய கிருஷ்ணனை குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பள்ளிகொண்டா போலீசார் விசாரித்து வருகின்றனர்.


