News September 11, 2025
வேலூர்: இதை செய்தால் பணம் போகும்! உஷார்

வேலூர் சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதில், What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருக்க வேண்டும் என்றனர். (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்)
Similar News
News September 11, 2025
வேலூர்: தமிழ் தெரிந்தாலே.. ரூ.80,000 வரை சம்பளம்

▶️கிராமப்புற வங்கிகளில் காலியாக உள்ள 13,217 பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. ▶️18 முதல் 28 வயது உள்ளவர் விண்ணப்பிக்கலாம். ▶️ஏதேனும் ஒரு டிகிரி போதும். ▶️தமிழ் தெரிந்திருக்க வேண்டும். ▶️சம்பளம் ரூ.35,000 முதல் ரூ.80,000 வரை. ▶️ https://www.ibps.in/என்ற இணையதளத்தில் செப்.21க்குள் விண்ணப்பிக்க வேண்டும். ▶️பணிக்கான தேர்வு நவம்பர் (அ) டிசம்பரில் நடைபெறும். ▶️மேலும் தகவலுக்கு கிளிக் பண்ணுங்க.
News September 11, 2025
மாணவிக்கு பாலியல் தொல்லை மளிக்கடைக்காரர் கைது!

வேலூர் அருகே வசிப்பவர் குப்பன் ( 58). மளிகைக்கடை நடத்தி வருகிறார். 7-ம் வகுப்பு படிக்கும் 11 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து மாணவி கதறி அழுதபடி தனது தாயாரிடம் கூறினார். அதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிந்து குப்பனை நேற்று கைது செய்தார்.
News September 11, 2025
வேலூர்: தலையை வெட்டி சிறைக்கு வந்த நபர்

கள்ளக்குறிச்சி, மலைக்கோட்டாலம் கிராமத்தில் லட்சுமி மற்றும் தங்கராசு ஆகியோர் தலையை துண்டித்து வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்த பின், பேருந்தில் ஏறி வேலூரில் உள்ள வேலூர் மத்திய சிறைக்கு வந்து கைது செய்யுமாறு போலீசாரிடம் கூறினார். இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறை காவலர்கள், போலீசாரிடம் ஒப்படைத்தனர்.