News September 15, 2025
வேலூர்: ஆற்றில் மூழ்கி இளைஞர் உயிரிழப்பு

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு, கெம்பசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் விக்னேஷ், ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது வலிப்பு ஏற்பட்டு நீரில் மூழ்கி உயிரிழந்தார். அருகில் இருந்தவர்கள் அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் குறித்து பேரணாம்பட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News September 15, 2025
வேலூர்: பாதுகாப்பு கேட்டு காவல் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்

வேலூர் மாவட்டம் ஒடுகத்தூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த திரிஷா (22) மற்றும் பாக்கம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த சரண் (25) இருவரும் காதலித்தனர். இவர்களது காதலுக்கு திரிஷாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, இருவரும் கடந்த 12ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி ஓசூரில் திருமணம் செய்து கொண்டனர். பின்னர், தங்களுக்குப் பாதுகாப்பு கேட்டு நேற்று வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தனர்.
News September 15, 2025
வேலூர் மாவட்ட காவல் துறை செய்த மாஸ் சம்பவம்

வேலூர் மாவட்டத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் ஏ.மயில்வாகனன் முயற்சியால், ரூ.50 லட்சம் மதிப்புடைய 250 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. 2023-ல் அறிமுகப்படுத்தப்பட்ட “செல் ட்ராக்கர்” கூகுள் படிவம் மூலம், இதன் மூலம் இதுவரை 9 கட்டங்களாக ரூ.3.38 கோடி மதிப்பிலான 1,754 கைப்பேசிகள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் வழங்கப்பட்டுள்ளன.
News September 15, 2025
வேலூர்: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
✅ வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் (RC) ரத்து செய்யப்படும்
✅ வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
✅ 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
✅ பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)