News September 18, 2025
வேலூர் ஆட்சியர் இளைஞர்களுக்கு புதிய அறிவிப்பு

தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) நிறுவனமானது ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு பல திறன் அடிப்படையிலான பயிற்சிகள் வழங்கி வருகிறது. தற்போது தாட்கோ, டால்மியா பாரத் நிறுவனம் இணைந்து வீட்டு சுகாதார உதவியாளர் வழங்க உள்ளது.
தாட்கோ இணையதளமான www.tahdco.com என்ற முகவரியில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி விடுத்த அறிக்கையில் கூறியுள்ளார்.
Similar News
News September 18, 2025
வேலூர்: பட்டாவில் திருத்தம் செய்வது இனி ஈஸி!

வேலூர் மக்களே! தமிழக அரசால் பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் & புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது ’TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். அடுத்து வரும் ஜமாபந்தியில் இவை பரிசீலிக்கப்பட்டு, மாற்றங்கள் செய்யப்படும். இந்த தகவலை ஷேர் பண்ணுங்க.
News September 18, 2025
வேலூரில் பட்டதாரிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம்!

வேலூர் பட்டதாரிகளே..தொழில் முனைய ஆர்வம் உள்ளவரா நீங்கள்? பணம் இல்லையே என கவலை வேண்டாம். தமிழக அரசால் உங்கள் ஊரில் உழவர் நல மையம் அமைக்க ரூ.6 லட்சம் வரை மானியம் வழங்கப்படுகிறது. மேலும், இந்தத் துறையில் இலவச சிறப்பு பயிற்சி பெற மாவட்ட வேளாண் பயிற்சி நிலையம், வேளாண்மை அறிவியல் நிலையத்தை அணுகலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
News September 18, 2025
BREAKING: வேலூர் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஆந்திர மாநிலத்தில் கடந்த சில நாட்களாக அதிக அளவு மழை பெய்து வருகிறது. இதனால் கலவகுண்டா நீர்த்தேக்கத்திலிருந்து உபரி நீர் வெளியேற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பொன்னை ஆற்றின் கரையோர பகுதியில் உள்ள மாதாண்டகுப்பம், எருக்கம்பட்டு, வள்ளிமலை, மேல்பாடி, கீழ்பாதநல்லூர், தேன்பள்ளி பகுதியில் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்து மக்களுக்கு தெரியப்படுத்துங்க