News September 1, 2025

வேலூர் அருகே பைக் திருட்டு போலீசார் விசாரணை

image

வேலூர் சலவன்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சரவணன் (30). இவர் வேலூர் காகிதப்பட்டறையில் உள்ள ஏடிஎம் மையம் முன்பு தனது பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். பின்னர் வந்து பார்த்தபோது பைக் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து சரவணன் வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரித்து வருகின்றனர்.

Similar News

News September 4, 2025

வேலூர்: இரவு ரோந்து காவலர்கள் விவரம்

image

வேலூர் மாவட்ட காவல்துறையால், இரவு பாதுகாப்பு பணிக்காக ரோந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மற்றும் கடலூர் சாலைகள் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் பொறுப்பான காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு கட்டுப்பாட்டு அறை எண்கள் வெளியிடப்பட்டு, பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

News September 3, 2025

மனித உரிமைகள் பிரிவு காவல்துறை கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இன்று சமூக நீதி மனித உரிமைகள் பிரிவு காவல் துறை தலைவர் சாமுண்டீஸ்வரி தலைமையில், வேலூர் சரகத்தில் நிலுவையில் உள்ள SC/ST வழக்குகளை விரைந்து முடிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கப்பெற வேண்டிய பண பலன்களை விரைந்து கிடைக்கப்பெற ஏற்பாடு செய்ய வேண்டும், என்பன குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் வேலூர் சரகத்திற்குட்பட்ட காவல் அதிகாரிகள் கலந்து கொண்டனர் .

News September 3, 2025

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரிக்கை

image

வேலூர் மாவட்டம் முழுவதும் இன்று (செப்டம்பர்-03) காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய சோதனையில், 67 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஒருவர் மீது மதுவிலக்கு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.

error: Content is protected !!