News April 22, 2024
வேலூர் அருகே பள்ளி மாணவன் மாயம்

குடியாத்தம் வள்ளலார் நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவர் 9ம் வகுப்பு படித்து வந்தார். தேர்தல் அன்று அவரது தாயார் ஓட்டுப்போடுவதற்காக சென்றிருந்தார். வீட்டில் மாணவர் மட்டும் தனியாக இருந்தார். தாயார் ஓட்டுப்போட்டு விட்டு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டில் மாணவரை காணவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
மேலும் குடியாத்தம் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து மாணவனை தேடி வருகின்றனர்.
Similar News
News February 4, 2026
வேலூர்: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2.பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்ற ஆப்ஷனை க்ளிக் செய்து, உங்களுக்கான ‘ஐடி’ யை உருவாக்க வேண்டும்.
3.இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4.பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். SHARE செய்யுங்க.
News February 4, 2026
வேலூரில் இந்த பகுதிகளுக்கு மின் தடை!

வேலூரில் உள்ள திருவலம், கர்ணாம்பட்டு, சத்துவாச்சாரி, வடுகந்தாங்கல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் இந்த மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின் வாரியம் அறிவித்து உள்ளது. எனவே பொது மக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்த படுகின்றனர்.
News February 4, 2026
வேலூரில் மின் தடை; உங்க ஏரியா இருக்கா?

வேலூரில் தொரப்பாடி, வடுகந்தாங்கல், சத்துவாச்சாரி, கார்ணாம்பட்டு துணைமின் நிலையங்களில் நாளை (பிப்.5) மின் தடை அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன்படி காலை 9 மணி முதல் 5 மணி வரை சித்தேரி, தென்றல் நகர், இடையன்சாத்து, அரியூர், தொரப்பாடி சிறை குடியிருப்பு, எழில் நகர், டோல்கேட், அண்ணாநகர், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், குப்பம், விருப்பாட்சிபுரம், ஓட்டேரி, பாகாயம் சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் தடை ஏற்படும்.


