News March 19, 2024
வேலூர் அருகே ஒற்றை காட்டு யானை அட்டகாசம்

வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அடுத்த குண்டலப்பள்ளி கிராமத்தில் நேற்றிரவு (மார்ச் 18) ஒற்றை காட்டு யானை அங்குள்ள விவசாய நிலத்தில் புகுந்து அங்கு பயிரிடப்பட்டிருந்த நெற்பயிர்களைச் சேதப்படுத்திக் கொண்டிருந்தது. அதனைக் கண்ட விவசாயிகள் பட்டாசு வெடித்தும் மேளங்கள் அடித்தும் யானையை காட்டுப்பகுதிக்குள் விரட்டினர். மேலும் இதுகுறித்து வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.
Similar News
News February 11, 2026
வேலூர்: தீயில் கருகிய டீ மாஸ்டர்!

எம்.வி.குப்பத்தை சேர்ந்த ஜெயக்குமார் (43), ஆந்திராவில் டீ மாஸ்டர் வேலை செய்து வந்தார். இவர் 2-ந் தேதி தனது அண்ணன் வீட்டிற்கு வந்துள்ளார். பின் 8-ந் தேதி இரவு மது போதையில் வீட்டில் மாடியில் பீடி குடிக்க தீக்குச்சியை பற்ற வைத்து விட்டு அணைக்காமல் தூங்கி உள்ளார். இதில் ஏற்பட்ட தீ விபத்தில் ஜெயக்குமார் தீயில் கருகி படுகாயமடைந்த இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
News February 11, 2026
வேலூர்: வீடு திரும்பியவருக்கு பேரதிர்ச்சி!

வேலூரை அடுத்த புதுவசூரைச் சேர்ந்த லேப் டெக்னீசியன், பிலீப்ரிச்சர்ட் (49). இவர் கடந்த 5-ந் தேதி குடும்பத்துடன் சென்னைக்கு சென்றார். தொடர்ந்து பிப்ரவரி 9-ம் தேதி வீடு திரும்பிய குடும்பம் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு 28 பவுன் நகைகள் திருடப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தது. இதுகுறித்து சத்துவாச்சாரி காவல் நிலைய 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News February 10, 2026
வேலூர் : Driving Licence-க்கு வந்த முக்கிய Update!

வேலூர் மக்களே, வீட்டில் இருந்தபடியே புதிய ஓட்டுநர் உரிமம் விண்ணப்பித்தல், உரிமம் புதுப்பித்தல், முகவரி திருத்தும், முகவரி மாற்றம், Mobile Number சேர்ப்பது போன்றவற்றை RTO அலுவலகம் செல்லாமல் <


