News December 5, 2025
வேலூர்: அரசு பேருந்து ஓட்டுனரை தாக்கிய மர்ம நபர்!

வேலூர்: குடியாத்தம் அருகே, பாண்டிச்சேரியில் இருந்து வந்த அரசு பேருந்தை ஓட்டிச் சென்ற முரளி (50) என்பவர், காட்பாடி நான்கு முனை கூட்ரோடு பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபரால் தாக்கப்பட்டார். காயமடைந்த ஓட்டுநர் முரளி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து உதயகுமார் (25) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News December 5, 2025
வேலூர்: 8 கிராம் தங்கம், ரூ.50,000 பணத்துடன் திருமணம்!

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.
News December 5, 2025
வேலூர்: INTERVIEW இல்லாமல் மத்திய அரசு வேலை ரெடி!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள்,<
News December 5, 2025
பாபர் மசூதி இடிப்பு தினம் – வேலூரில் 500 போலீசார் பாதுகாப்பு

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி நாளை (டிச. 6) நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல் வேலூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தலைமையில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பஸ், ரெயில் நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் மற்றும் நகரின் முக்கிய பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் இன்று மாலை முதல் ஈடுபட உள்ளனர்.


