News October 20, 2025
வேலூர் அரசு பஸ் மோதி அடையாளம் தெரியாத நபர் பலி

வேலூர் வள்ளலார் பஸ் நிறுத்தம் அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையை நேற்றிரவு அக்.19 கடக்க முயன்ற 45 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் மீது அவ்வழியாக வந்த அரசு பஸ் மோதியது. இந்த விபத்தில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த சத்துவாச்சாரி போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்த நபர் யார்? என விசாரித்து வருகின்றனர்.
Similar News
News October 21, 2025
வேலூர் மாவட்ட காவல்துறை இரவு வந்து பணி விவரம்

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.
News October 20, 2025
வேலூர்: 10th பாஸ் போதும் கைநிறைய சம்பளம்

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் விளையாட்டு வீரர்களுக்கான கோட்டாவில் பணி வாய்ப்பு வழங்கப்படுகிறது. 391 ஜென்ரல் டியூட்டி கான்ஸ்டபிள் பதவி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 சம்பளமாக வழங்கப்படும். இதற்கு 18 – 23 வயது வரை இருக்க வேண்டும். இப்பணியிடங்களுக்கு <
News October 20, 2025
வேலூர் ஆட்சியரின் தீபாவளி வாழ்த்து

அணைக்கட்டு வட்டம், பொய்கை ஊராட்சியில் உள்ள செஞ்சிலுவை சங்கத்தின் முதியோர் இல்லத்தில் தங்கியுள்ள மூத்த குடிமக்களை இன்று (அக்.20) மாவட்ட ஆட்சியர் வே.இரா. சுப்புலட்சுமி சந்தித்து தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார். பின் புத்தாண்டை மற்றும் இனிப்புகளை முதியோர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வின் போது வேலூர் மாவட்ட செஞ்சிலுவை சங்க பொதுக்குழு உறுப்பினர் இந்திரா குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.