News January 14, 2026
வேலூர்: அரசு ஊழியர்கள் லஞ்சம் கேட்டால் உடனே Call..! (CLICK)

வேலூர் மக்களே.. போலீஸ், தாசில்தார், MLA, கவுன்சிலர் போன்ற அரசு தொடர்புடைய ஊழியர்கள் தங்களது வேலைகளை முறையாக செய்யாமல் உங்களிடம் லஞ்சம் கேட்டால் கவலை வேண்டாம். உடனே வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இந்த பயனுள்ள தகவலை தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க!
Similar News
News January 29, 2026
வேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

வேலூர் சத்துவாச்சாரியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஜன.28) நடைபெற்றது. இந்த பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
News January 29, 2026
வேலூரில் பள்ளி மாணவி துடிதுடித்து பலி!

குடியாத்தம் அருகே விவசாயி வெங்கடேசனின் மகள் இனிதா (16). இவா் மாதனூரில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 படித்து வந்தாா். புதன்கிழமை மாலை வழக்கம்போல் பள்ளியிலிருந்து வீட்டுக்கு வந்த இவா் வீட்டருகே கருவேப்பிலை பறிக்கும் போது விவசாய கிணற்றில் தவறி விழுந்துள்ளாா். அப்பகுதி மக்கள் கொடுத்த தகவலின்பேரில், குடியாத்தம் தீயணைப்புப் படையினா் அங்கு சென்று அரை மணி நேரம் போராடி சடலத்தை மீட்டனர்.
News January 29, 2026
வேலூர்: காவல்துறை இரவு ரோந்து பணி விவரம் வெளியீடு!

வேலூர் மாவட்டத்தில் உள்ள முக்கிய நகரங்கள் குடியாத்தம், காட்பாடி, கே வி குப்பம், மேல்பட்டி, பேரணாம்பட்டு, அணைக்கட்டு, பள்ளிகொண்டா இடங்களில் பொதுமக்களின் பாதுகாப்புக்காக வேலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் இரவு ரோந்து பணி செய்து வருகின்றன. அதன்படி நேற்று (ஜன-28) இரவு ரோந்து பணி விவரம் வெளியிடப்பட்டுள்ளது. இரவு நேரங்களில் வேலைக்குச் செல்லும் பெண்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.


