News September 9, 2025
வேலூர்: அடிக்கடி மின் துண்டிப்பு: பொதுமக்கள் அவதி

வேலூர், காட்பாடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுவதால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். குறிப்பாக, மழைக்காலங்களில் வயதானவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் குழந்தைகள் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகப் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே, இந்தப் பிரச்சினையைத் தீர்க்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரியத்திற்குப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Similar News
News September 9, 2025
வேலூர் ரேஷன் கார்டு திருத்த சிறப்பு முகாம் கலெக்டர் தகவல்

பொது விநியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்கும் விதமாக வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அளவில் வரும் செப்டம்பர் 13-ம் தேதி சனிக்கிழமை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை ரேஷன் கார்டு சிறப்பு திருத்த முகாம் நடைபெற உள்ளது. இதில் கார்டில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ளலாம் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
News September 9, 2025
மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்கல்

வேலூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று (செப்.09) நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி கலந்து கொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு அடையாள அட்டைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரோகிணிதேவி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் பாபு உட்பட பலர் உடனிருந்தனர்.
News September 9, 2025
வேலூர் அரசு மருத்துவமனையில் ஆட்சியர் ஆய்வு

வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (செப்.09) வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனையை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அங்குள்ள பொதுமக்கள், நோயாளிகளிடம் முறையாக சிகிச்சை வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது வேலூர் அரசு மருத்துவமனை முதல்வர் ரோகிணிதேவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.