News October 29, 2025
வேலூருக்கு வருகை தரும் துணை முதல்வர்

தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நாளை (அக்டோபர் 30) வேலூர் மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். அவர் காட்பாடி பிரம்மபுரம் பகுதியில் தனியார் திருமண மண்டபத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கிறார். பின்னர் பிற்பகலில் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் பங்கேற்கிறார். மேலும் அரசு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
Similar News
News October 29, 2025
வேலூர்: ரயில்வேயில் 3,058 பணியிடங்கள்.. APPLY NOW!

வேலூர் மக்களே, 2025-ம் ஆண்டுக்கான கமர்சியல் உடன் டிக்கெட் கிளார்க், டைப்பிஸ்ட் போன்ற பணிகளுக்கு 3,058 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 12th படித்து 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம. இந்த பணிக்கு மாத சம்பளமாக ரூ.19,900 – ரூ.21,700 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் நவ.27ம் தேதிக்குள் <
News October 29, 2025
வேலூர்: கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்றுவது எப்படி!

உங்கள் இடம் அல்லது மனை கூட்டு பட்டாவில் இருந்தால் அதற்கு தனிப் பட்டா பெற நிலத்தை பகிர்ந்து தனியாக மாற்ற வேண்டும். பின்னர்,
1. கூட்டு பட்டா
2. விற்பனை சான்றிதழ்
3. நில வரைபடம்
4. சொத்து வரி ரசீது
5. மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம்
இந்த ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். நிலத்தை அதிகாரிகள் ஆய்வு செய்த பின், 30-60 நாள்களில் தனி பட்டா கிடைத்துவிடும். அனைவருக்கும் SHARE செய்து தெரியப்படுத்துங்கள்.
News October 29, 2025
வேலூர் மாவட்ட எஸ்பி எச்சரிக்கை

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று ( அக்.28 ) நடத்தப்பட்ட சோதனையில் 185 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 1 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் எச்சரித்துள்ளார்.


