News October 15, 2025
வேலூருக்கு மழை எச்சரிக்கை!

தென்மேற்கு வங்கக்கடல் & அதையொட்டிய கடலோரப் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டத்திலும் புதுச்சேரியின் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்கள் பகுதியில் வானிலை எப்படி உள்ளது என கமெண்டில் சொல்லிட்டு போங்க!
Similar News
News October 15, 2025
வேலூர் லஞ்சம் வாங்கிய வனத்துறை அலுவலர் கைது

வேலூர் மாவட்ட வனத்துறை அலுவலகத்தில் இ பிரிவில் ஏழுமலை பணியாற்றி வந்துள்ளார். வேலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் வன பாதுகாவலராக பணி செய்து ஓய்வு பெற்ற ஜெயவேல் உயிரிழந்த நிலையில் அவருக்கு வரவேண்டிய நிலுவைத் தொகையை வழங்க ஏழுமலை ஜெயவேலின் மனைவியிடம் 10 ஆயிரம் லஞ்சமாக பெறும்போது மறைந்திருந்த வேலூர் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கையும் களவுமாக பிடிபட்டார். ஏழுமலை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
News October 15, 2025
வேலூர் மக்களே உங்கள் ஊர் இனி உங்கள் கையில்!

வேலூர் மக்களே உங்கள் ஊரில் தெருவிளக்கு, சாலை, குடிநீர், மருத்துவமனை, கழிவுநீர், பள்ளிகூடங்களில் உள்ளிட்ட அடிப்படை பிரச்சனைகளுக்கும் உடனே தீர்வு கிடைக்க வேண்டுமா? <
News October 15, 2025
வேலூர் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு

வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (அக்.15) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், வேலூர் மாவட்டத்தில் சம்பா பருவத்தில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிரில் காணப்படும் தண்டுத்துளைப்பான், புகையான், இலைச்சுருட்டுப்புழு மற்றும் உவர் தன்மையினால் ஏற்பட்டுள்ள பாசிகளை கட்டுப்படுத்திட விவசாயிகள் வட்டார வேளாண் அலுவலர்களை தொடர்பு கொண்டு உடனடியாக பயிர்பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.