News January 10, 2026

வேலூருக்குள் புகுந்த யானைக்கூட்டம்!

image

வேலுாா் மாநகராட்சிக்குள்பட்ட இந்திரா நகா், செங்குட்டை ஆகிய பகுதியில் நேற்று 13- யானைகள் கூட்டமாக உலா வந்துள்ளன. அப்போது, வீட்டின் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்த பெண்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் வந்து யானைகளை விரட்டியபோது, விவசாய பயிர்களை நாசம் செய்துவிட்டு யானைக்கூட்டம் அங்கிருந்து சென்றது. தற்போது, DRONE மூலம் வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

Similar News

News February 14, 2026

வேலூரில் டிராக்டர் வாங்க 80% மானியம்!

image

வேலூரில் புதிய டிராக்டர், பவர் டில்லர், ஓலை தூளாக்கும் கருவி, புதர் அகற்றும் கருவி உட்பட பல்வேறு வேளாண் கருவிகளை வாங்குவதற்கும், அதனை வைத்து வாடகை நிலையம் அமைப்பதற்கும் 80% வரை மானியம் வழங்குகிறது SMAM திட்டம். இந்த திட்டத்தின் கீழ் பலனடைய விரும்பும் நபர்கள், மேலும் தகவல்களுக்கு <>இங்கு க்ளிக்<<>> செய்யலாம் அல்லது வேளாண் துறை அலுவலகத்தை அணுகி தெரிந்துகொள்ளலாம். SHARE NOW!

News February 14, 2026

வேலூரில் பைக் வாங்க ரூ.50,000 மானியம்!

image

இந்திய அரசு கடந்த ஆண்டு பிரதம மந்திரி இ-டிரைவ் (PM E-DRIVE) என்ற புதிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் கீழ், பொதுமக்கள் எலக்ட்ரிக் வாகனங்களை எளிதாக வாங்க முடியும். இருசக்கர வாகனங்களுக்கு ரூ.10,000 வரையும், 3சக்கர வாகனங்களுக்குரூ.25,000-ரூ.50,000 வரையும் மானியம் வழங்கப்படுகிறது. புதிய வாகனம் வாங்க ஆசைப்படுபவர்கள் <>இந்த லிங்கில்<<>> சென்று விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க

News February 14, 2026

வேலூரில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் – கலெக்டர் தகவல்!

image

வேலூர் மாவட்டத்தில் வரும் பிப்ரவரி 21-ம் தேதி சனிக்கிழமை வேலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் தனியார்துறை சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் 40-க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க உள்ளது. எனவே வேலூர் மாவட்டத்தை சார்ந்த வேலை தேடும் நபர்கள் கலந்துகொண்டு பயனடையுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!