News January 22, 2026

வேலூரில் 8 கிராம் தங்கம் இலவசம்!

image

TN அரசு சாதி மறுப்பு திருமணங்களை ஊக்குவிக்க டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி கலப்பு திருமண திட்டத்தை செயல்படுத்துகிறது. இதன்படி, மணமக்கள் 10th முடித்திருந்தால் ரூ.25,000, 8 கி தங்கம், டிகிரி பெற்றிருந்தால் ரூ.50,000, 8 கி தங்கம் வழங்கப்படுகிறது. இதற்கு, BC,MBC/SC,ST & FC/BC,MBC முறையில் திருமணம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு சமூக நல அலுவலரை அணுகலாம். இந்த தகவலை உடனே ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 24, 2026

வேலூரில் வீடு புகுந்து துணிகர கொள்ளை…

image

குடியாத்தம் களர்பாளையம் பகுதி சேர்ந்தவர் தண்டபாணி, கட்டிட மேஸ்திரி. இவரது வீட்டிற்கு அருகில் இவருக்கு சொந்தமான மற்றொரு வீடு உள்ளது. அந்த வீட்டில் அவர் தங்கி இருந்தார். நேற்று காலை வீட்டிற்கு வந்து பார்த்த போது 5 பவுன் நகை திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து குடியாத்தம் தாலுகா போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

வேலூரில் கொடூரத்தின் உச்சம்…

image

குடியாத்தம் கொல்லிமேடு பகுதியை சேர்ந்தவர் பூவரசன். இவரது மகன் தங்ககுருநாதன் (10). கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பூவரசனின் மனைவி பிரிந்து சென்று நிலையில் மகனுடன் வாழ்ந்து வருகிறார். படிக்காமல் விளையாடி கொண்ட மகனுக்கு தந்தை சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 24, 2026

வேலூர்: 16 வயது சிறுமி ஏமாற்றம்.. காமுகனுக்கு சிறை

image

வேலூர் அத்தியூரை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் கடந்த 2023-ம் ஆண்டு 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் அரியூர் போலீசார் உதயகுமாரை கைது செய்தனர். இவ்வழக்கு வேலூர் போக்சோ கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன் நேற்று உதயகுமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் 2 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

error: Content is protected !!