News July 6, 2025

வேலூரில் 6 மாதத்தில் ரூ.8 கோடி பணம் மோசடி

image

வேலூர் மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களில் 8 கோடியே 50 லட்சம் ரூபாய் பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக 1,335 புகார்கள் வந்துள்ளது. மோசடி நபர்கள் பயன்படுத்திய வங்கி கணக்கை முடக்கம் செய்து, 1 கோடியே 32 லட்சத்து 55 ஆயிரம் மீட்கப்பட்டு சம்பந்தப்பட்டவர்களின் வங்கிக்கு வரவு வைப்பதற்கான பணி நடந்து வருகிறது. சைபர் குற்றங்களில் ஈடுபட்டதாக 6 பேரை கைது செய்துள்ளோம். என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்தனர்.

Similar News

News July 6, 2025

வேலூரில் இரவு ரோந்து பணி செய்யும் போலீசார் விவரம்

image

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஜூலை 6) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் சற்று முன் வெளியிடப்பட்டுள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க

News July 6, 2025

15 வயது சிறுவன் தற்கொலை போலீசார் விசாரணை

image

வேலூர் நெல்வாய் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் மேஸ்திரி. இவரது மகன் தனசேகரன்(15) தனது பிறந்த நாளை முன்னிட்டு நண்பர்களுக்கு சாக்லெட் வாங்கித்தர ஆயிரம் ரூபாய் வேண்டும் என பெற்றோரிடம் கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் கூலி வரவில்லை வந்ததும் தருகிறோம் என்று கூறியுள்ளனர். இதனால் விரக்தியடைந்த தனசேகரன் நேற்றிரவு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News July 6, 2025

வேலூர் உதவித்தொகை பெற விண்ணப்பம் கலெக்டர் தகவல்

image

வேலூரில் கடந்த 2020 ஏப்ரல் 1-ந்தேதி முதல் ஜூன் 30 தேதி வரையிலான காலாண்டில் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டுகள் முடிவு பெற்றுள்ளவர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகம் அல்லது<> இந்த <<>>இணையதளத்தில் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து விண்ணப்பித்து பயனடையுமாறு கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார். ஷேர் பண்ணுங்க

error: Content is protected !!