News January 13, 2025
வேலூரில் 5 அடி நீள கண்ணாடி விரியன் பாம்பு பிடிபட்டது

வேலூர் கோட்டையின் பின்புறம் கோசாலை உள்ளது. இந்த கோசாலையில் உள்ள கிணற்றில் கண்ணாடி விரியன் பாம்பு எதிர்பாராத விதமாக விழுந்து வெளியே வர முடியாமல் தவித்தது. இதைக்கண்ட கோசாலை நிர்வாகிகள் வேலூர் வனச்சரக அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனக்காப்பாளர்கள் பாம்பு பிடிக்கும் நபருடன் அங்கு சென்று கிணற்றுக்குள் தவித்த 5 அடி நீளமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.
Similar News
News August 23, 2025
வேலூர்: நீங்களும் இ-சேவை மையம் தொடங்கலாம்

வேலூர் மக்களே இ-சேவை மையம் தொடங்க விருப்பமா? அதற்கு முதலில், www.tnesevai.tn.gov.in , என்ற தமிழக அரசின் இ-சேவை இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர் குறைந்தபட்சம் 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். புகைப்படம், கல்வி சான்றிதழ், இருப்பிட சான்றிதழ், ஆதார் அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்கு புத்தகம், வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்டவற்றை சமர்பித்து விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.
News August 23, 2025
வேலூர்: அரசு சேவைகள் இனி அருகாமையில்!

சாதி சான்று பெற, பட்டா மாற்றம் செய்ய, பென்சன் வாங்க, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் தகுதிவாய்ந்த விடுபட்ட மகளிர் பயன் பெற, மருத்துவ காப்பீட்டு அட்டை பெற, ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்ய, ரேசன் அட்டையில் முகவரி திருத்தம் செய்ய போன்ற கோரிக்கைகளுக்கு அரசு அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி அலுவலர்கள் நேரடியாக உங்கள் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வந்து தீர்வுகளை வழங்க உள்ளனர். <
News August 23, 2025
வேலூர் இரவு ரோந்து பணி போலீசார் விவரம்

வேலூர் மாவட்டம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இன்று (ஆக.22) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது. ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாருக்கான தகவல்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. புகார்கள் மற்றும் தகவல்களை தெரிவிக்க தொடர்பு கொள்ளலாம். ஷேர் பண்ணுங்க.