News June 6, 2024

வேலூரில் 2,75,000 மரக்கன்று நடும் திட்டம்

image

ஈஷாவின் காவேரி கூக்குரல் இயக்கம் மூலம் இந்தாண்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களில் 2,75,000 மரக்கன்றுகள் நட திட்டமிடப்பட்டுள்ளது. உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி நேற்று (ஜூன் 5) வேலூரில் நடைபெற்ற இதன் தொடக்க விழாவில் மாநகராட்சி ஆணையர் ஜானகி  மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.  இவ்வியக்கம் விவசாயிகள் மரம் நடுவதற்கு தேவையான தொழில்நுட்ப உதவிகளை இலவசமாக வழங்கி வருகிறது.

Similar News

News August 22, 2025

வேலூர் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வேலூர் மாவட்டம் ரங்காபுரத்தில் இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்த ஆலோசனைக் கூட்டம் வரும் ஆகஸ்ட் 24-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10:30 மணியளவில் நடைபெற உள்ளது. இதில் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் கலந்து கொண்டு அறிவுரை வழங்க உள்ளார். எனவே விழா குழுவினர்கள் இதில் கலந்து கொள்ள அழைத்துள்ளனர்.

News August 22, 2025

வேலூர் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்

image

வேலூர் மாவட்டத்தில் நாளை ஆகஸ்ட் 22 உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள். 1. வேலூர் மாநகராட்சி, ஆனை குளத்தம்மன் கோயில் சமுதாயக்கூடம் கொசப்பேட்டை 2. காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ரேணுகாம்பாள் மஹால் வஞ்சூர் 3.அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வரதலம்பட்டு என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 22, 2025

வேலூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம் நாளை ஆகஸ்ட் 22 காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் சுப்புலட்சுமி தலைமை தாங்குகிறார். இதில் அனைத்து துறை அரசு அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். எனவே வேலூர் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை தெரிவித்து பயனடையுமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!