News January 27, 2026

வேலூரில் வாலிபர் துடிதுடித்து பலி!

image

கே.வி குப்பம் அடுத்த கீழ் விளாச்சூர் பகுதியில் சேர்ந்தவர் செந்தில்குமார் (36). இவர் நேற்று (ஜன.26) பைக்கில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஆட்டோ மோதியதில் பலத்த காயமடைந்தார். வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட அவர் இறந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டது. இது குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஆட்டோ டிரைவர் ஹேமந்த் குமாரை கைது செய்தனர்.

Similar News

News February 18, 2026

வேலூர்: பசு மாடு வாங்க ரூ.1,20,000 கடனுதவி!

image

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கி கணக்கு விபரங்களுடன், ஆவின் / மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க!

News February 18, 2026

எஸ்பி அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் இன்று (பிப்.18) நடைபெற்றது. துணை காவல் கண்காணிப்பாளர் இருதயராஜ் (DCRB) தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு குறை தீர்வு கூட்டத்தில் 48 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ளப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

News February 18, 2026

பாதாள சாக்கடை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

image

வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, வசந்தபுரம் பகுதியில் பாதாள சாக்கடை திட்டப்பணியின் கீழ் கழிவு நீரேற்று நிலையம் கட்டுமான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி இன்று (பிப்ரவரி 18) பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.

error: Content is protected !!