News August 16, 2025
வேலூரில் வாடகை வீட்டுக்கு போறீங்களா?

வேலூரில், வாடகைக்கு குடியேற்பவர்கள் இதை தெரிந்து கொள்ளுங்கள். ஆண்டுக்கு 5% மட்டுமே வாடகையை உயர்த்த வேண்டும். 2 மாத வாடகையை மட்டுமே அட்வான்ஸாக கேட்க வேண்டும். 11 மாதங்களுக்கு மேற்பட்ட குத்தகை ஒப்பந்தங்கள் சட்டப்படி பதிவு செய்ய வேண்டும். வாடகையை உயர்த்த 3 மாதங்களுக்கு முன் அறிவிப்பு தர வேண்டும். இதை மீறுபவர்களை அதிகாரிகளிடம் (1800 599 01234, 9445000417, 9445463333) புகார் செய்யலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News August 16, 2025
வேலூரில் இல. கணேசன் மறைவுக்கு அஞ்சலி

வேலூர் மாவட்ட பாஜக சார்பில் மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல. கணேசன் மறைவையொட்டி பாஜக மாநில செயலாளர் கார்த்தியாயினி அவரது படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் ஆர்எஸ்எஸ் அதிகாரி ஜெகதீசன், இந்து முன்னணி கோட்ட பொறுப்பாளர் மகேஷ், வேலூர் பாஜக மாவட்ட செயலாளர் தசரதன், உள்ளிட்ட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.
News August 16, 2025
திருத்தணியில் அணைக்கட்டு எம்.ஏல்.ஏ சாமி தரிசனம்

திருத்தணி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் மற்றும் வேலூர் மாவட்ட கழக செயலாளர், அணைக்கட்டு சட்டமன்றத் உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார் இன்று சாமி தரிசனம் செய்தனர். உடன் திராவிட முன்னேற்றக் கழகம் நிர்வாகிகள், ஆலய நிர்வாகத்தினர் ஏராளமானோர் பங்கேற்றனர்
News August 16, 2025
வேலூர் முருகர் கோயிகளில் 500 போலீசார் பாதுகாப்பு

ஆடி கிருத்திகையை முன்னிட்டு, வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து முருகன் கோயில்களிலும் பக்தர்கள் கூட்டம் அதிகம் காணப்படும். இந்நிலையில், வேலூர் மாவட்ட எஸ்.பி. மயில்வாகனன் தலைமையில் மாவட்டம் முழுவதும் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, தீர்த்தகிரி, பாலமதி, மகாதேவமலை, வள்ளிமலை உள்ளிட்ட 25 முக்கிய முருகர் கோயில்களில் தலா 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.