News October 12, 2025
வேலூரில் லஞ்சம் கேட்டாங்களா? உடனே CALL

அரசு துறைகளில் லஞ்சம் வாங்குவது தொடர்பான புகார்களை 044-22321090 / 22321085, 044-22310989 / 22342142 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை அலுவலகத்தையும் (0416-2220893) தொடர்பு கொள்ளலாம். புகார் தெரிவிப்பவர்களின் விபரங்கள் ரகசியம் காக்கப்படும். அரசு அதிகாரிகள் யாராக இருந்தாலும் தைரியமாக புகார் கொடுங்கள். லஞ்சம் வாங்குவது குற்றம்! ஷேர் பண்ணுங்க
Similar News
News December 10, 2025
வேலூர்: கார், பைக் வாங்குவோருக்கு ஹேப்பி நியூஸ்!

வேலூர் மாவட்ட மக்களே.., சென்னை உயர்நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, இந்த மாதம் முதல் பைக், கார்களை ஆர்டிஓ அலுவலகத்திற்கு நேரில் கொண்டுவந்து ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம் முற்றிலும் நீக்கப்படுகிறது. வணிக வாகனங்களுக்கு மட்டுமே அந்த ஆய்வு தொடரும். இந்தத் தகவலை உடனே உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க!
News December 10, 2025
வேலூர்: மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் பல்வேறு நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேலும், அலிம்கோ நிறுவனத்தின் மூலம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கான உதவி உபகரணங்கள் வழங்கிட முன்னேற்பாடாக பயனாளிகளை தேர்வு செய்வதற்கான முகாம் நாளை(டிச.11) காட்பாடியில் உள்ள ஒர்த் அறக்கட்டளையில்பெற நடை உள்ளது என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News December 10, 2025
வேலூர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கும் பணி

சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபார்க்கும் பணி நாளை(டிச.11) வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற உள்ளது. மாவட்டத்தில் தற்போது 1,314 வாக்கு சாவடிகள் உள்ளன. திருத்த பணிகள் முடிந்த பின்னர் கூடுதலாக 113 வாக்கு சாவடிகளை சேர்த்து 1,427 இருக்கும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.


