News January 11, 2026
வேலூரில் ரூ.5 லட்சம் இலவச மருத்துவ காப்பீடு!

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், 1 குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வருமானச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மருத்துவ அடையாள அட்டை வழங்கும் மையத்தில் பதிவு செய்து, அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். மேலும் தகவல்களுக்கு 1800 425 3993 அழைக்கவும். ஷேர் பண்ணுங்க!
Similar News
News January 27, 2026
வேலூரில் 85 நிறுவனங்களுக்கு அதிரடி அபராதம்!

வேலூர் தொழிலாளர் உதவி கமிஷனர் (அமலாக்கம்) வரதராஜன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் நேற்று (ஜன.26) குடியரசு தினத்தன்று விடுமுறை அளிக்காத கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், மோட்டார் போக்குவரத்து நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். அப்போது 85 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அபாரதம் விதிக்கப்பட்டது.
News January 27, 2026
வேலூர்: அறிவியல் மையத்தில் பாலியல் சர்ச்சை!

வேலூர் மாவட்ட அறிவியல் மையம் பொறுப்பாளராக பணிபுரிபவர் சதீஷ் குமார். இந்த மையத்தில் தற்காலிக அடிப்படையில் பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணுக்கு சத்தீஷ்குமார் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அந்த பெண் வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News January 27, 2026
வேலூரில் போலீசார் அதிரடி!

வேலூர் மாவட்டம் முழுவதும், காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நேற்று (ஜன.26) நடத்தப்பட்ட சோதனையில் 273 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 மதுவிலக்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவர் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் விடுத்துள்ள செய்தி குறிப்பில் எச்சரித்துள்ளார்.


