News January 19, 2026

வேலூரில் மூதாட்டி திடீர் சாவு!

image

துத்திப்பட்டு பஸ் நிறுத்தம் அருகே நேற்று (ஜன.18) மூதாட்டி ஒருவர் திடீரென மயங்கி கீழே விழுந்தார். இவரை பொதுமக்கள் மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சுயநினைவின்றி காணப்பட்ட மூதாட்டிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து பாகாயம் போலீசார் விசாரித்து நடத்தி வருகின்றனர்.

Similar News

News January 21, 2026

வேலூர்: ஒரே இடத்தில் 3 டாஸ்மாக்குகள்; மக்கள் அவதி!

image

வேலூர்–ஆற்காடு சாலையில் ஒரே இடத்தில் 3 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகிறது. இதற்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பள்ளிகள், குடியிருப்புகள் அருகே மதுக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதால் பெண்கள், மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுவதாக குற்றசாட்டு எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து அரசு நடவடிக்கை எடுக்க கோரிக்கை எழுந்துள்ளது.

News January 21, 2026

வேலூரில் 700 பேர் அதிரடி கைது!

image

வேலூரில் தோ்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரி சத்துணவு ஊழியர்கள் நேற்று (ஜன.20) போராட்டத்தில் ஈடுபட்டனர். 2021 சட்டப்பேரவை தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட 700 பேரை போலீசார் நேற்று கைது செய்தனர். இந்த நடவடிக்கையால் வேலூர் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

News January 21, 2026

வேலூரில் அதிரடி சோதனை!

image

வேலூர் சரகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இயக்கப்பட்ட சிறப்பு பேருந்துகள் மீது போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் விதிமுறைகளை மீறிய 109 பேருந்துகளுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டு, மொத்தமாக ரூ.21 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டது. பயணிகள் பாதுகாப்பு மற்றும் ஒழுங்கை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

error: Content is protected !!