News March 26, 2025

வேலூரில் மீண்டும் கடும் வெயில்: 101.5°F பதிவு

image

வேலூர் மாவட்டத்தில் இன்று (மார்ச் 26) அதிகபட்சமாக 101.5°F வெயில் பதிவாகியுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக குறைந்திருந்த வெப்பம் மீண்டும் அதிகரித்து, பகலில் அனல் காற்று வீசுகிறது. இது பொதுமக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது. இந்த மாதத்தில் இது 5ஆவது முறையாக வெப்பம் 100°F கடந்துள்ளது.

Similar News

News April 3, 2025

வியக்க வைக்கும் தமிழ்நாட்டின் பொற்கோயில்

image

பஞ்சாப்பில் சீக்கியர்கள் வழிபடும் பொற்கோவில் உள்ளதை போல தமிழ்நாட்டின் தங்கக்கோவிலாக வேலூரில் லட்சுமி நாராயணி கோயில் உள்ளது. முழுவதுமே தங்கத்தால் ஆன இந்த கோயில் தென்னிந்தியாவின் கோல்டன் டெம்பிளாக அறியப்படுகிறது. இங்குள்ள மகாமண்டபத்தில் நின்று லக்ஷ்மியை தரிசனம் செய்தால் பணக்கஷ்டம் நீங்கி 16 வகையான செல்வங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கை. வேலூர் மாவட்ட சிறப்பை உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

News April 3, 2025

வேலூரில் கொடி கம்பங்களை அகற்ற உத்தரவு

image

பொது இடங்களில் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், அரசு அலுவலர் சங்கங்கள், மதம், சாதிய அமைப்புகள், இதர அமைப்புகளின் கொடிக்கம்பங்களை உடனே அகற்ற வேண்டும் என்று சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.இதை வேலூர் மாவட்டத்தில் செயல்படுத்துவது குறித்த ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. வரும் ஏப்.21-ஆம் தேதிக்குள் கோடி கம்பங்களை அகற்ற வேண்டும் என ஆட்சியா் உத்தரவிட்டுள்ளார்.

News April 3, 2025

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில்  புதிய பாடப்பிரிவுகள்

image

வேலூர் காட்பாடி அடுத்த திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் 3 புதிய பாடப் பிரிவுகள் கொண்டுவரப் பட்டுள்ளன.வரும் கல்வியாண்டு (2025-26) முதல் புதியதாக 3 துறைகள் (1) உயிரிவேதியியல், (2) எம்.பி.ஏ. (3.) நூலக அறிவியல் போன்ற முதுகலை பட்டய படிப்புகள் கொண்டுவரப்பட்டுள்ளன என துணை வேந்தர் ஆறுமுகம் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!