News March 23, 2025

வேலூரில் மழைக்கு வாய்ப்பு

image

வேலூரில் இன்று (மார்.23) காலை 11 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்க வாய்ப்புள்ளது. எனவே, வெளியே செல்லும் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருங்கள். ஷேர் செய்யுங்கள்

Similar News

News April 9, 2025

வேலூர் மாவட்டத்தில் டாஸ்மாக் விடுமுறை 

image

வேலூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகள், பார்கள் மற்றும் நட்சத்திர அந்தஸ்து பெற்ற ஹோட்டல்களில் உள்ள மதுபான பார்களுக்கு வரும் ஏப்.10 அன்று மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு விடுமுறை அளிக்கப்படுகிறது. மேலும் மது பானங்கள் விற்பனை செய்யக்கூடாது. மீறி விற்பனை செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் சுப்புலட்சுமி இன்று தெரிவித்துள்ளார்.

News April 9, 2025

குடியாத்தத்தில் தனியார் வேலைவாய்ப்பு 

image

வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் சார்பில், வரும் 11ஆம் தேதி குடியாத்தம் ராஜகோபால் பாலிடெக்னிக் கல்லூரியில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறும் இந்த முகாமில், 100க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம்.

News April 9, 2025

பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை

image

வேலூர் அரசு உதவி பெறும் (ஊரிஸ்) தனியார் கல்லூரியில், பெண் விரிவுரையாளருக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான புகாரில், தனியார் கல்லூரி துணை முதல்வர் அன்பழகன் நேற்று (ஏப்ரல் 8) கைது செய்யப்பட்டார். வேலூர் மகளிர் காவல் நிலையத்தில் பெண் விரிவுரையாளர் அளித்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. தலைமறைவாக இருந்த அவர், ஆந்திராவில் கைது செய்யப்பட்டார்.

error: Content is protected !!