News January 21, 2026

வேலூரில் மலிவு விலையில் வீடுகள்! CLICK NOW

image

வேலூர் மக்களே! இந்த 2026-யில் வீடு கட்டுவது உங்கள் கனவா? உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா’ திட்டத்தின் மூலம், வீடு வாங்க, கட்ட மானியத் தொகை வழங்கப்படுகிறது. இதில், பொருளாதார ரீதியாக நலிவடைந்த பிரிவினர், குறைந்த வருமானம் கொண்டவர்கள், நடுத்தர வருமானம் கொண்டவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து விண்ணப்பித்து உங்கள் கனவை நனவாக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News January 29, 2026

வேலூரில் அடையாளம் தெரியாத ஆண் பிணம்!

image

பொன்னை அணைக்கட்டு பகுதியில் நேற்று (ஜன.28) அடையாளம் தெரியாத 75 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொன்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் முதியவர் எப்படி இறந்தார்? என்பது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

News January 29, 2026

வேலூர்: கண நேரத்தில் நடந்த அதிர்ச்சி மரணம்!

image

வேலூர் வசந்தபுரத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சரவணன் (60). இவர் நேற்று நேற்று (ஜன.28) மாலை கோட்டை அகழி கரையோரம் மது அருந்தி கொண்டிருந்தார். அப்போது திடீரென சரவணன் அகழியில் தவறி விழுந்தார். அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட இவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 29, 2026

வேலூரில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

image

வேலூர் சத்துவாச்சாரியில் வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நேற்று (ஜன.28) நடைபெற்றது. இந்த பேரணியை வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் நான்கு சக்கர வாகனங்கள் ஓட்டும் போது கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும். இருசக்கர வாகனத்தில் செல்லும் போது ஹெல்மெட் அணிவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

error: Content is protected !!