News January 13, 2026
வேலூரில் மணல் கொள்ளை; தட்டி தூக்கிய போலீஸ்

பேரணாம்பட்டு அடுத்த எம்.வி. குப்பம் பாலாற்றில் மணல் கடத்துவதாக மேல்பட்டி போலீசாருக்கு நேற்று (ஜன.12) ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 5 மணல் மூட்டைகளை பைக்கில் கடத்திக்கொண்டு சாமரிஷி குப்பம் பகுதியை சேர்ந்த அரேஸ் (45) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Similar News
News January 25, 2026
வேலூர்: இனி EB ஆபீஸ் போகத் தேவையில்லை!

வேலூர் மக்களே, அதிக மின் கட்டணம், மின்தடை, மீட்டர் பழுது, மின் திருட்டு போன்ற புகார்களுக்கு இனி நேரடியாக மின்வாரிய அலுவலகம் செல்லத் தேவையில்லை. நீங்கள் உங்கள் வீட்டில் இருந்தபடியே, உங்கள் செல்போனில் இங்கே கிளிக் செய்து <
News January 25, 2026
வேலூரில் 44 பேர் படுகாயம்!

பள்ளிகொண்டாவில் 72-ம் ஆண்டாக நேற்று (ஜன.25) காளை விடும் விழா நடந்தது. இதில் 255 காளைகள் கலந்து கொண்டன. விழா தொடங்கியதும் காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக அவிழ்த்து விடப்பட்டு சீறிப்பாய்ந்து ஓடின. மேலும் விழாவில் காளைகள் முட்டியதில் 44 பேர் காயம் அடைந்தவர்களுக்கு மருத்துவ முகாமில் சிகிச்சை வழங்கப்பட்டன. படுகாயம் அடைந்தவர்களுக்கு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்
News January 25, 2026
வேலூர் உழவர் சந்தை காய்கறி விலை நிலவரம்

வேலூர் உழவர் சந்தையில் இன்றைய (ஜன.25) காய்கறி விலை நிலவரம் வெளியாகி உள்ளது. இதன்படி (1 கிலோ) தக்காளி ரூ.20, உருளை ரூ.25, சின்ன வெங்காயம் ரூ.40, பெரிய வெங்காயம் ரூ.26, மிளகாய் ரூ.55, வெண்டை ரூ.40, கத்திரிக்காய் ரூ.25, பீர்க்கங்காய் ரூ.40, புடலங்காய் ரூ.35, சுரைக்காய் ரூ.20, பாகற்காய் ரூ.30, தேங்காய் ரூ.35, முள்ளங்கி ரூ.15, பீன்ஸ் ரூ.40, அவரை ரூ.30, கேரட் ரூ.20 என விற்பனை செய்யப்படுகிறது.


