News August 12, 2024

வேலூரில் மக்கள் குறைதீர்வு கூட்டம்

image

வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக காயிதே மில்லத் கூட்டரங்கில் இன்று மக்கள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி மக்களிடம் இருந்து மனுக்களை பெற்று சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி, மாநகராட்சி ஆணையாளர் ஜானகி ரவீந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News March 5, 2026

வேலூர்: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

வேலூர் மாவட்டத்தில் நேற்று (மார்ச்.04) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100-ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. ஷேர் பண்ணுங்க!

News March 4, 2026

வேலூர்: கவலை தீர்க்கும் கருணைக்கடல்..!

image

வேலூர் அனந்தலை மதுர காளியம்மன் அன்னை,வேண்டுவோருக்கு வேண்டியதை அருளும் சக்தி வாய்ந்த தெய்வமாகத் திகழ்கிறாள். இக்கோஇலில் செவ்வாய் & வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜைகள் விசேஷமாக நடைபெறும். திருமணத் தடை நீங்கவும், குடும்ப நலன் வேண்டியும் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சாந்த சொரூபியாகக் காட்சியளிக்கும் அம்மனின் சன்னதி, பக்தர்களுக்கு மிகுந்த மன அமைதியை வழங்குகிறது. ஷேர்!

News March 4, 2026

வேலூர் நீதிமன்றத்தில் இலவச ஆலோசனை பெறுவது எப்படி?

image

வேலூர் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். வேலூர் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் – 0416-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!