News July 4, 2025
வேலூரில் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (2/2)

காவல்துறையினர் நியாயமற்ற சோதனை, பறிமுதல், தாக்குதல், வாய்வழி துன்புறுத்தல் அல்லது தொல்லை, சட்ட விரோத கைது அல்லது தடுப்புக்காவல், முறையான நடைமுறைகளை பின்பற்றத் தவறுதல் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மனித உரிமைகள் ஆணையம்/காவல் கண்காணிப்பாளர்/ மஜிஸ்திரேட்டிடம் புகார் அளிக்கலாம். புகார் செய்யும் போது சாட்சி கணக்குகள், மருத்துவ பதிவுகள் (காயமடைந்திருந்தால்), வீடியோ பதிவுகள் (இருந்தால்) புகைப்படங்கள் தேவை.
Similar News
News July 4, 2025
வேலூர் பயனாளிகளுக்கு விதை தொகுப்புகளை வழங்கிய கலெக்டர்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 4) வேளாண் மற்றும் வேளாண் விற்பனை வணிகத்துறையின் சார்பில் வேலூர் மாவட்டத்தில் 3 கோடி மதிப்பில் ஒருங்கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து கலெக்டர் சுப்புலட்சுமி பயனாளிகளுக்கு காய்கறி மற்றும் பழச்செடி விதை தொகுப்புகளை வழங்கினார். இதில் வேலூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
News July 4, 2025
வேலூர் மத்திய சிறை மீது பறந்த டிரோன்!

வேலூர் மாவட்டம் தொரப்பாடியில் உள்ள மத்திய சிறை வளாகத்தின் மீது நேற்றிரவு (ஜூலை 3) மத்திய சிறையை படம் பிடிப்பது போன்று டிரோன் ஒன்று பறந்துள்ளது. இதனை பிடிக்க சிறை அதிகாரிகள் முயன்ற போது டிரோன் பறந்து சென்றுள்ளது. இதுகுறித்து மத்திய சிறை துறை அதிகாரிகள் பாகாயம் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
News July 4, 2025
வேலூர் மக்களே போலீஸ் அடித்தால் என்ன செய்யலாம் (1/2)

அஜித்குமார் என்ற வாலிபர் போலீசாரின் கண்மூடித்தனமான தாக்குதலால் உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ளது. இதுபோன்று போலீசார் விதி மீறி நடந்து கொண்டால், மனித உரிமைகள் ஆணையத்தில்<