News December 20, 2025

வேலூரில் பைக்குகள் தொடர் திருட்டு!

image

வேலூர் கொணவட்டம் அப்துல்ஷாகிப் தெருவை சேர்ந்தவர் அன்சார் (35). இவர், வீட்டு வாசலில் தனது பைக்கை நிறுத்தி இருந்தார். நேற்று வந்து பார்த்த போது பைக்கை மர்மநபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்த புகாரின் பேரில் வேலூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவரது மற்றொரு பைக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருட்டு போனது குறிப்பிடத்தக்கது.

Similar News

News December 22, 2025

வேலூர்: தேர்வு இல்லாமல் அரசு வங்கியில் வேலை

image

வேலூர் மக்களே, SBI வங்கியில் காலியாக உள்ள 284 Customer Relationship Executive பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி படித்திருந்தால் போதுமானது. சம்பளம் ரூ.51,000 வழக்கப்படுகிறது. வயது வரம்பு 20-35. எழுத்து தேர்வு கிடையாது. விருப்பமுள்ளவர்கள் நாளை டிச.23ம் தேதிக்குள், <>இந்த லிங்கை <<>>க்ளிக் செய்து விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை வேலை தேடும் நபர்களுக்கு அதிகம் SHARE பண்ணுங்க!

News December 22, 2025

இந்தியா முழுவதும் ஒலித்த வேலூரின் குரல்

image

இந்தியாவின் மிக பிரபலமான பிண்ணனி பாடகியான வாணி ஜெயராம் வேலூரில் பிறந்தவர். கலைவாணி என்ற இயற்பெயரை கொண்ட இவர் தமிழ் உட்பட 19 இந்திய மொழிகளில் பாடியுள்ளார். வெளிநாடுகள் சென்று பல இசை நிகழ்ச்சிகளை வழங்கிய இவர் “ஏழு சுவரங்களின் கான சரஸ்வதி” என்று அழைக்கப்பட்டார். நித்தம் நித்தம் நெல்லு சோறு, பாரதி கண்ணம்மா போன்ற பாடல் மிகவும் பிரபலமாவை. பல விருதுக்கு சொந்தக்காரரான இவர் தனது 77வது வயதில் உயிரிழந்தார்.

News December 22, 2025

வேலூர் வாக்காளர்களே சூப்பர் UPDATE!

image

வேலூர் மக்களே வரைவு வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் உள்ளதா? என்பதை அறிய மிகவும் எளிய வழி ‘1950’ என்ற எண்ணிற்கு SMS அனுப்பி தெரிந்துகொள்ளலாம். அதற்கு ‘ECI உங்கள் EPIC எண்’ (எ.கா.:- ECI SXT000001) என டைப் செய்து ‘1950’ என்ற எண்ணிற்கு அனுப்பினால், அடுத்த சில நொடிகளில் உங்களின் பெயர், வரிசை எண், பாகம், தொகுதி என அனைத்தும் குறுஞ்செய்தியாக வரும். இதனை அனைவருக்கும் அதிகமாக ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!