News November 6, 2025
வேலூரில் பணம் திருடிய வாலிபருக்கு 3 மாதம் சிறை

வேலூர் ஓல்டு டவுனைச் சேர்ந்த வினோத் (29). கடந்த ஆண்டு பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்தபோது, ரூ.1.30 லட்சம் பணத்தை திருடிய வழக்கில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்டார். இதுகுறித்து கடை உரிமையாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் போலீசார் வினோத்தை இன்று (நவ.06) கைது செய்தனர். வழக்கு விசாரணை முடிவில், மாஜிஸ்திரேட் ரஞ்சிதா, வினோத்துக்கு 3 மாதம் சிறை தண்டனையும் ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்தனர்.
Similar News
News November 6, 2025
வேலூர்: வாட்ஸ்அப் வழியாக கேஸ் புக்கிங்!

வேலூர் மக்களே, கேஸ் சிலிண்டர் புக் செய்ய நீங்கள் நேரில் செல்ல தேவையில்லை. உங்கள் வாட்ஸ்அப் மூலமாக எளிதாக & விரைவான புக் செய்யலாம். இண்டேன் (Indane): 7588888824, பாரத் கேஸ் (Bharat Gas): 1800224344, ஹெச்பி கேஸ் (HP Gas): 9222201122. மேற்கண்ட எண்களுக்கு, வாட்ஸப்பில் ‘HI’ என மெசேஜ் செய்தால் போதும், உங்கள் வீடு தேடி கேஸ் சிலிண்டர் வந்தடையும். ஷேர் பண்ணுங்க!
News November 6, 2025
வேலூர்: டிகிரி போதும் ரூ.85,920 சம்பளம்!

வேலூர் மக்களே, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 750 LOCAL BANK OFFICER காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 20 வயது பூர்த்தி அடைந்து, ஏதேனும் ஒரு டிகிரி முடித்தவராக இருக்க வேண்டும். மாத அசமபலமாக ரூ.48,480 – ரூ.85,920 வழங்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள்<
News November 6, 2025
வேலூர்: பள்ளி பேருந்து மோதியதில் சிறுமி பலி

வேலூர்: வரதரெட்டிபள்ளி பகுதியை சேர்ந்த ஜெயச்சந்திரன் – மோனிகா தம்பதியின் மகள் கீர்த்தீஷா (4) பரதராமியில் உள்ள தனியார் பள்ளியில் LKG படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (நவ.5) மாலை பள்ளி பேருந்தில் இருந்து இறங்கி முன்பக்கமாக நடந்து வந்துள்ளார். இதை கவனிக்காமல் ஓட்டுநர் தமிழ்செல்வன் பேருந்தை இயக்கியதால், சிறுமி மீது பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார்.


