News January 24, 2025
வேலூரில் பட்டப்பகலில் வாலிபர் வெட்டிக்கொலை

சத்துவாச்சாரியைச் சேர்ந்த செல்வகுமார்(38), இன்று காலை 11 மணியளவில் சேண்பாக்கம், ராகவேந்திரா கோவில் பின்புறம் உள்ள சாலையில் பைக்கில் சென்று கொண்டு இருந்தார். அப்போது செல்வகுமாரை பின் தொடர்ந்து வந்த மர்மநபர்கள், செல்வகுமாரை பைக்கில் இருந்து கீழே தள்ளி கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பியோடினர். இதுகுறித்து தகவலறிந்த வடக்கு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
Similar News
News August 10, 2025
வேலூர் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி

சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் ஆகஸ்ட் 17-ம் தேதி வேலூர் கோட்டை அரசு அருங்காட்சியகம், வட ஆற்காடு ஓவியர் சங்கம் மற்றும் டாட் இமேஜிங் நுண் கலைக்கூடம் இணைந்து நடத்தும் மாவட்ட அளவிலான ஓவிய போட்டி அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற உள்ளது. இதில் 1 வயது முதல் 12 வயது வரை உள்ள மாணவர்கள் பங்கேற்கலாம். முன் பதிவிற்கு 7667580831, 9443885207 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
News August 9, 2025
மாரத்தானில் பங்கேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து வேலூர் நேதாஜி ஸ்டேடியம் வரை நடைபெற்ற போதைப் பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு மரத்தான் போட்டியில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் பங்கேற்று ஓடினார். இந்த மரத்தான், போதைப்பொருள் தடுப்பு மற்றும் இளைஞர்களுக்கு உடல்நலத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது.
News August 9, 2025
வேலூர் மாவட்டத்திற்கு எச்சரிக்கை. கவனம் மக்களே!

வேலூர் உள்ளிட்ட 24 மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வேலூரில் உள்ள மக்கள் வெளியில் செல்லும் போது உரிய உபகரணங்களை உடன் கொண்டு செல்லுங்கள். இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய உள்ளதால் மின்சாரம் துண்டிக்கப்படலாம் எனவே மெழுகுவர்த்தி போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கு இதனை ஷேர் பண்ணுங்க