News January 23, 2026
வேலூரில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழா

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் அவர்களின் 129-வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (ஜன.23) வேலூர் மாவட்டம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள திருவள்ளுவர் சிலை அருகே வேலூர் நேதாஜி மார்க்கெட் தேச பக்தர்கள் சார்பில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் அனைத்து வியாபாரிகள், பொதுமக்கள் கலந்து கொள்ள வேண்டும் என விழா குழுவினர் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
Similar News
News January 24, 2026
BREAKING: வேலூரில் இருவர் துடிதுடித்து பலி!

பேர்ணாம்பட்டு பக்காலப்பல்லி பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் தோல் தொழிற்சாலையில் விஷ வாயு கசிந்து பணியில் இருந்த ஷேக் அலி (58), ஜமால் பாஷா (41) இருவரும் மயங்கி விழ்ந்துள்ளனர். இதையடுத்து அவர்களை மீட்டு ஆம்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவரும் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
News January 24, 2026
வேலூர் பெண்களே.. சொந்த காலில் நிக்கணுமா?

ஹோட்டல் அல்லது கேட்டரிங் தொழிலை தொடங்க நினைக்கும் பெண்களுக்காக, மத்திய அரசு ‘பிரதம மந்திரி அன்னபூர்ணா யோஜனா’ திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதில் பயன்பெற விரும்பும் பெண்கள் அருகில் இருக்கும் வங்கிக்கு சென்று விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு 2 நாட்களுக்குள் உங்களது வங்கி கணக்கில் ரூ.50,000 வந்துவிடும். இதனை 3 ஆண்டுகளுக்குள் திரும்பி செலுத்தினால் போதும். உடனே ஷேர் பண்ணுங்க!
News January 24, 2026
வேலூர் மக்களே 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <


