News February 28, 2026
வேலூரில் நிலத்தகராறில் பரபரப்பு!

பள்ளிகொண்டா அடுத்த இறைவன்காடு பகுதியை சேர்ந்தவர் வேங்கடேசன் இவரது மகன்கள் திருவேங்கடம் வயது 50, மணிகண்டன் வயது 43 இவர்கள் இருவருக்கும் கடந்த 22 ஆம் தேதி அன்று நிலத்தில் தண்ணீர் பாய்ச்சுவதில் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த தம்பி மணிகண்டன் அவரது அண்ணனை தாக்கியுள்ளார் இதுகுறித்து திருவேங்கடம் கொடுத்த புகார் பேரில் பள்ளிகொண்டா போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை இன்று கைது செய்தனர்.
Similar News
News March 4, 2026
BREAKING: வேலூர் மக்களிடம் SORRY கேட்ட விஜய்!

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு கூட்டம், தஞ்சையில் உள்ள செங்கிப்பட்டு பகுதியில் இன்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றிய தவெக தலைவர் விஜய் ”நெஞ்சில் குடியிருக்கும் வேலூர் மக்களே” என கூறியுள்ளார். கடந்த மாதம் வேலூரில் நடைபெற்ற கூட்டத்தில் ”இதை சொல்ல மறந்துட்டேன், SORRY” எனக் கூறி, இன்று தஞ்சாவூரில் கூறியுள்ளார்.
News March 4, 2026
வேலூர்: டிகிரி இருக்கா? ரூ.58,000 சம்பளத்தில் வேலை!

வேலூர் மக்களே.., இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள 650 உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தாலே போதுமானது. மாதம் ரூ. 58,514 சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க வருகிற மார்ச் 8ம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்க இங்கே <
News March 4, 2026
வேலூர் கலெக்டர் ஆபீசில் முக்கிய ஆலோசனை!

வேலூர் மாவட்ட தேர்தல் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில் நேற்று (மார்ச்.3) அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், சட்டமன்ற பொதுத்தேர்தல் 2026 முன்னிட்டு தேர்தல் செலவினங்களை கண்காணிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவராமன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் சிவசுப்பிரமணியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


