News January 6, 2026

வேலூரில் நள்ளிரவில் திகில்!

image

காட்பாடியில் போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது காட்பாடி மிஷன் காம்பவுண்ட் பகுதியில் மதுபோதையில் கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் அசோக் நகரை சேர்ந்த மகேந்திரன் (23) என்பதும், அவர் மீது திருட்டு, வழிப் பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் மகேந்திரனை கைது செய்தனர்.

Similar News

News February 6, 2026

வேலூரில் அதிரடி மாற்றம்!

image

வேலூரில் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலர் தீனதயாளன், வேலூர் தாலுகா துணை தாசில்தாராகவும், குடியாத்தம் தாலுகா முன்னாள் தலைமையிடத்து துணை தாசில்தார் மஞ்சுநாதன், மாவட்ட வழங்கல், நுகர்வோர் பாதுகாப்பு அலுவலக தலைமை உதவியாளராகவும் பணியிட மாற்றம் பெற்று உள்ளனர். மேலும் அங்கு பணியாற்றிய நதியா, வேலூர் நெடுஞ்சாலைகள் தனி மாவட்ட வருவாய் அலுவலக நேர்முக உதவியாளராக பணியிட மாற்றம் செய்ய கலெக்டர் உத்தரவிட்டு உள்ளார்.

News February 6, 2026

வேலூர்: சினிமா பாணியில் சேஸ் செய்து போலீசார் அதிரடி!

image

பரணாம்பட்டு -வீ.கோட்டா சாலையில் பேரணாம்பட்டு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது எருக்கம்பட்டு-கோட்டையூர் வழியாக 2 பேர் கர்நாடக மதுபாக்கெட்டுகளை கடத்தி வந்தனர். இதையறிந்த போலீசார் பைக்கில் 1 கி.மீ தூரத்துக்கு சினிமா பாணியில் துரத்தி சென்றனர். இதையறிந்த ஆசாமிகள் ரூ. 1 லட்சம் மதிப்பிலான மதுபாக்கெட்டுகள் போட்டுவிட்டு தப்பினர். போலீசார் தற்போது தப்பி ஓடியவர்கள் தேடி வருகின்றனர்.

News February 6, 2026

வேலூர்: மனைவியின் சேலையில் தூக்கிட்ட கணவன்!

image

தொரப்பாடி, சுப்பிரமணி தெருவை சோ்ந்தவா் ராஜா (61). இவா் மாடு வியாபாரம் செய்து வந்தாா். இவரது மனைவி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இவரது மகன் பெங்களூருவில் வேலை செய்து வருகிறாா். மனைவியில் பிரிவு மற்றும் தனிமை காரணமாக மன அழுத்தத்தில் இருந்த ராஜா நேற்று (பிப்.5) மாட்டு கொட்டகையில் சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பாகயம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

error: Content is protected !!