News April 5, 2025
வேலூரில் சேல்ஸ் மேன் வேலை

வேலூர் மாவட்டத்தில் உள்ள யுரேகா ஃபோர்ப்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் சேல்ஸ் மேன் வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளன. 8, 10, 12ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்ற ஆண், பெண் இருபாலரும் இதற்கு விண்ணப்பிக்கலாம். 20- 35 வயதுடையவர்களாக இருக்க வேண்டும். சம்பளம் ரூ.15,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் வரும் 30ஆம் தேதிக்குள் இந்த <
Similar News
News April 5, 2025
வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் வேலைவாய்ப்பு

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரியில் (CMC) பல்வேறு பதவிகளுக்கு 10 காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இப்பணிகளுக்கு ரூ.30,643 வரை சம்பளம் கிடைக்கும். இதற்கு, 10th, Any Degree, B.Sc, BVSc, D.Pharm, M.Sc, MA, MD, MS, MSW, PG Diploma போன்ற படிப்புகளை படித்தவர்கள் https://www.cmch-vellore.edu/about-us/ என்ற தளத்தில் ஏப்ரல் 7-க்குள் விண்ணப்பிக்கலாம். *செம்ம வாய்ப்பு, நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்க
News April 5, 2025
வேலூர் மக்களுக்கு மின்சார அதிகாரிகள் எச்சரிக்கை

வேலூா் காகிதப்பட்டறை, சேண்பாக்கம் பகுதியில் மின் கம்பங்களில் கட்டப்பட்டிருந்த பசுமாடுகள் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தன. இதையடுத்து, ‘மின் கம்பங்களில் கால்நடைகளை கட்டி வைக்க வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் மின்வாரிய அலுவலகத்துக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்’ என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். *இது போன்ற முக்கிய அறிவுரைகளை கண்டிப்பாக பின்பற்றுங்கள். நண்பர்களையும் உஷார் படுத்துங்கள்*
News April 5, 2025
வேலூர் மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்தில் நடைபெற்று வரும் குடிநீர், சாலை, கழிவுநீர் கால்வாய், புதை சாக்கடை திட்டப் பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் முதலாவது மண்டல அலுவலக கூட்டரங்கில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது ஆட்சியர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் புதை சாக்கடை, சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று மாநகராட்சி அதிகாரிகளுக்கு வேலூர் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி உத்தரவிட்டுள்ளாா்.