News January 3, 2026
வேலூரில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு

வேலூர் புதிய பஸ் நிலையத்தில் சாலை பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் சுந்தர்ராஜன் தலைமை தாங்கினார். இதில் பஸ் டிரைவர்களுக்கும், கண்டக்டர்கள் மற்றும் பொதுமக்களுக்கு சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினர். இதில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜ்குமார், போக்குவரத்து சப்-இன்ஸ்பெக்டர் ரஜினி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 7, 2026
வேலூர்: சிறுமிகளின் ஆபாச படங்களை பகிர்ந்த நபர்!

குடியாத்தம் தரணம்பேட்டையை சேர்ந்த சையத் நியாஸ் (31). இவர் சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பகிர்ந்ததாக கடந்த 2020-ம் ஆண்டு குடியாத்தம் மகளிர் போலீசார் கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை வேலூர் போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ராதாகிருஷ்ணன், சையத் நியாஸ்க்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.
News January 7, 2026
வேலூர்: மின் வெட்டு பகுதிகள்!

வேலூர் மாவட்டத்தில் இன்று (07.01.2026) பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம், எம்.ஆர்.புரம், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், சூரை, எம்.வி.புரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள் மின் விநியோக பராமரிப்பு பணிகளுக்காக இந்த தற்காலிக தடை அறிவிக்கப்பட்டுள்ளது.