News August 27, 2025

வேலூரில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

image

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு போஸ்டர் இன்று (ஆகஸ்ட் 27) வெளியிடப்பட்டது. இதில் “Security starts with you” & “Think before you click” போன்ற விழிப்புணர்வு வாசகங்கள் பொதுமக்களுக்காக இடம்பெற்றிருந்தது. மேலும், சைபர் குற்றங்கள் ஏற்பட்டால் 1930 இலக்கத்திலும் cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டது.

Similar News

News August 27, 2025

வேலூர்: அமெரிக்கா விதித்த வரியால் வேலை இழப்பு

image

அமெரிக்காவின் 50 சதவீத வரி விதிப்பால் வேலூர் மாவட்டத்தில் உள்ள பல தோல் தொழற்சாலைகள் மூடும் நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக பேரணாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் இயங்கும் 300க்கும் மேற்பட்ட தோல் தொழிற்சாலைகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சுமார் ரூ.100 கோடி ஏற்றுமதி பாதிக்கும் என கூறப்படும் நிலையில் லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்கள் என தொழிற்துறை வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

News August 27, 2025

வேலூர்: கூட்டுறவு வேலைக்கு விண்ணபிப்பது எப்படி?

image

▶️ வேலூர் கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள 76 பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்பட உள்ளன. ▶️சம்பளம் ரூ. 23,640 முதல் ரூ. 96,395 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ▶️விண்ணபிக்க https://www.drbvellore.net/index.php இணையதளத்திற்கு செல்ல வேண்டும். ▶️பெயர், பிறந்த தேதி, முகவரி, கல்வித்தகுதி, விண்ணப்பதாரரின் புகைப்படம், கையொப்பம் பதிவேற்றம் செய்து விண்ணப்பிக்க வேண்டும். நல்ல வேலை உடனே SHARE பண்ணுங்க.

News August 27, 2025

வேலூர் மாவட்ட ஆட்சியரின் அறிவிப்பு

image

வேலூர் மாவட்டத்தில் இயங்கி வரும் செங்கல் சூளைகள், சேம்பர் சூளைகள் சுற்றுச்சூழல் வனம் காலநிலை மாற்றம் அறிக்கையின்படி புகைப்போக்கி அமைத்து சிறுகனிம சலுகை விதிகளின்படி பதிவு சான்றிதழ் பெற வேண்டும். இப்பதிவு சான்றிதழை https://www.mimas.tn.gov.in என்ற இணையதள முகவரியில் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பம் செய்து ஒரு மாதத்துக்குள் பெற்று கொள்ள வேண்டும் என கலெக்டர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!